டெல்லியில் ஏப்ரல் 1 முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் கொரோனா வைரஸின் மூன்றாம் அலையின் தாக்கம், கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் மூலம் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கமான முறையில் இயங்கும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.