Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி ஆம்னி பேருந்துகளும் இயங்காது… அடுத்த அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது. அதனால் புயல் எதிரொலி காரணமாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என நேற்று அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் புயலால் தீவிர பாதிப்பு ஏற்படும் என்பதாலும் புயல் கரையை கடக்க தாமதமாகும் என்பதால் 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகளும் இன்று மதியம் ஒரு மணி முதல் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |