உங்கள் ஓட்டுனர் உரிமத்தை நீங்கள் புதுப்பிக்க விரும்பினால் இனி நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம்.
நாம் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க அல்லது நகல் உரிமம் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகம் செல்வோம். தற்போது வாகனங்களை தற்காலிகமாக பதிவு செய்வது போன்ற பிற சேவைகளையும் ஆன்லைன் மூலம் பெற முடியும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி 18 சேவைகளை இப்போது ஆன்லைன் மூலம் நாம் செய்து கொள்ளலாம்.
இந்த சேவை மூலம் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், நகல் ஓட்டுநர் உரிமம் வாங்குதல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், பதிவு சான்றிதழ், சர்வதேச ஓட்டுனர் அனுமதி வழங்குதல், வாகனத்தின் வகுப்பை சரணடைதல், மோட்டார் வாகனத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம், மோட்டார் வாகனத்தை பதிவு செய்ததற்கான விண்ணப்பம், நகல் சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம், பதிவு செய்வதற்கான என்ஓசி வழங்குவதற்கான விண்ணப்பம், மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கு விண்ணப்பம், சான்றிதழ் முகவரி மாற்றுவதற்கான விண்ணப்பம், ஆகியவற்றை நாம் ஆன்லைன் மூலம் செய்துகொள்ள முடியும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.