Categories
மாநில செய்திகள்

“இனி ஆர் டி ஓ ஆபிஸ் செல்ல வேண்டாம்”… மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள் வாகன பதிவு மற்றும் உரிமையை மாற்றுதல் போன்ற 58 குடிமக்கள் தொடர்பான சேவையை ஆதார் வைத்து ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது முதல் சான்றிதழ்கள் பெறுவது வரை பல விஷயங்களில் ஆன்லைனில் கொண்டு வந்திருக்கிறது. தற்போது நாட்டில் நாளுக்கு நாள் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஓட்டுநர் உரிமம், நேஷனல் பர்மிட், வாகன ரிஜிஸ்ட்ரேஷன் போன்றவற்றை எளிமையான முறையில் ஆன்லைனில் செய்யும் விதமாக சேவையை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஓட்டுநர் உரிமம் வாகன பதிவு மற்றும் உரிமையை மாற்றுதல் போன்ற 58 குடிமக்கள் தொடர்பான சேவைகளை ஆதார் சரிபார்ப்பு மூலம் ஆன்லைனில் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக அரசு அலுவலகங்களில் மக்களின் காத்திருப்பு நேரம் குறைவது மட்டுமல்லாமல் பணியின் செயல் திறனையும் அதிகரிக்க முடியும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் பழகுணர் உரிமம், டூப்ளிகேட் லைசென்ஸ், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு இதற்கு ஓட்டுனர் தகுதி தேர்வு தேவையில்லை.

அதாவது லேனர் லைசன்ஸ், டூப்ளிகேட் லைசென்ஸ், ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பு போன்றவற்றை பெற வேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று வாகனங்களை ஓட்டி காட்டுவதற்கான அவசியம் இல்லை. அதனால் இனி இதனை பெற விரும்புவோர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக அப்ளை செய்து பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக செப்டம்பர் 16ஆம் தேதி அன்று அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி ஆதார் எண் இல்லாத எந்த ஒரு நபரும் CMVR1989 படி அந்தந்த அலுவலகங்களில் நேரடியாக மாற்ற ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலமாக சேவைகளை பெற முடியும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த சேவையை பெற www.parivahan.gov.in என்னும் இணையதளத்தையும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் உருவாக்கியிருக்கிறது. மேலும் இந்த தளம் மூலமாக பெயர் மாற்றம் ஓட்டுநர் உரிமம், பழகுணர் உரிமம், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல், சர்வதேச ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம், கையொப்பம் மாற்றம் வாகன உரிமை மற்றும் முகவரி மாற்றம் போன்ற 58 செய்திகளையும் கட்டண சேவைக்கான தொகையை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டிருக்கி

Categories

Tech |