Categories
மாநில செய்திகள்

இனி இங்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… பொது சுகாதாரத் துறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் 1900 இனி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார் .

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது. இதற்காக தடுப்பூசி மையங்களை அதிகரிப்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியுள்ளதாவது: முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

தற்போதைய உள்ள  நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,217  மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் புதிதாக தொடங்கப்பட்ட 1,500 மினி கிளினிக்குகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |