தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் சென்ற மாதம் முதல் ஐந்து கிலோ சோட்டு சமையல் சிலிண்டர் விற்பனை தொடங்கியது. மேலும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களிலும் ஐந்து கிலோ எடையுள்ள சோட்டு சிலிண்டர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும். நுகர்வோர் ரேஷன் கடைகளிலும் சிலிண்டர்களை நிரப்பி கொள்ளலாம்.
இந்த நிலையில் கேரளாவில் ரேஷன் கடை மூலமாக 5 கிலோ சோட்டு எல்பிஜி சிலிண்டர் விற்பனை செய்ய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. அரசின் கே-ஸ்டோர் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.