தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களின் வரவு செலவு கணக்குகள் இணையத்தில் வெளியாக உள்ளது. கோவில் நிலங்களை தொடர்ந்து வரவு செலவு கணக்குகளும் வெளியாகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்து அறநிலையத்துறை இன்று வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.