UPI கட்டணங்களை அதிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு இந்த செய்தி மிக முக்கியமானதாக இருக்கும். சில நேரங்களில் UPI கட்டணம் செலுத்த விரும்பும் நிலையில், இணைய வேகம் மிகவும் மெதுவாக இருக்கும் அல்லது மிக மோசமான நெட்வொர்க் காரணமாக UPI கட்டணம் செலுத்த முடியாமல் போகலாம். இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு உள்ளது. அது UPI பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும். பயனர்கள் தங்களது போன் மூலமாகவும் ஆஃப்லைனில் பணம். எந்தவித சிக்கலும் இல்லாமல் பணம் செலுத்துவதற்கு மிகக் குறைந்த பட்ச நெட்வர்க் கவரேஜ் உங்களுக்கு உதவும்.
அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இது மட்டும் தான். உங்கள் மொபைலில் *99# USSD குறியீட்டை டயல் செய்தால் மட்டும் போதும். உங்கள் தொலைபேசியில் டரைலரை திறந்து *99# என்பதை உள்ளிட்டு கால் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து *99#என்ற டயல் செய்த உடன் உங்கள் வங்கியை தேர்ந்தெடுப்பதற்கான top-up கிடைக்கும். அதன்பிறகு பட்டியலிலிருந்து வங்கிக் கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் UPI பின்னை உருவாக்கி, உங்களது டெபிட் கார்டின் கடைசி 6 இலக்கங்களை உள்ளிட வேண்டும். பிறகு உங்கள் டெபிட் கார்டின் காலாவதி தேதியை உள்ளிட வேண்டும்.
உங்களின் 6 இலக்க UPI பின்னை உறுதிப்படுத்தவும். உங்கள் UPI பின் செட் ஆகிவிடும். பிறகு மீண்டும் *99# என்று டயல் செய்தால் ஒரு பட்டியல் தோன்றும். நீங்கள் பணம் அனுப்ப வேண்டுமென்றால் எண் 1- ஐ டைப் செய்து send என்பதை கிளிக் செய்ய வேண்டும். பணம் பெறுபவரிடமிருந்து உங்களிடம் உள்ள தகவலை தேர்ந்தெடுத்து எண்ணை டைப் செய்து send என்பதை மீண்டும் கிளிக் செய்ய வேண்டும். பிறகு தொகையை உள்ளிட்ட அனுப்பவும். கட்டணம் செலுத்துவதற்கான குறிப்பை உள்ளிட வேண்டும். பரிவர்த்தனையை முடிக்க உங்கள் UPI பின்னை உள்ளிட வேண்டும். அவ்வகையில் உங்கள் UPI பரிவர்த்தனை இணையம் இல்லாமலேயே நிறைவடைந்து விடும்.