மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் வேலை வாய்ப்பு பதிவு செய்யலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “2021 22 ஆம் கல்வியாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் மதிப்பின் சான்றிதழ்களை நிகழ் நிலையாக அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2021-22 ஆம் கல்வியாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதிதாக பதிவு செய்து கொள்ள என்ற இணையதளம் வாயிலாகவும் தங்களது அருகாமையில் உள்ள இ சேவை மையம் வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளுடன் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நீதி வழிகாட்டு மையத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.