Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கு அனுமதி…. வருமான வரி செலுத்துவோருக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே அதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விரைவில் வருமான வரி தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020-2022 ஆம் மதிப்பீட்டு ஆண்டு மற்றும் 2021-2022 ஆ மதிப்பீட்டு ஆண்டுக்கான அப்டேட் ஐடிஆர் 2, ஐடிஆர் 3படிவங்களை வருமான வரி இணையதளத்தில் தாக்கல் செய்யலாம் என்று வருமானவரித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த மத்திய பட்ஜெட் அறிக்கையின் போது வருமான வரி ரிட்டன் படிவங்கள் தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் திருத்தப்பட்டன. அப்போது வருமான வரி ரிட்டன்களில் தவறுகள் அல்லது விடுபட்டு போன விவரங்கள் ஏதாவது இருந்தால் இரண்டு வருடத்திற்குள் திருத்தி அப்டேட் செய்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு படிவங்களில் தவறுகள் அல்லது விடுபட்டு போன தகவல்கள் ஏதாவது இருந்தால் திருத்தி அப்டேட் செய்து கொள்ளலாம் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |