இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாளம் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது
. இந்நிலையில் ஆதார் தொலைந்து விட்டால் மீண்டும் புதிய ஆதார் அட்டையை பெறுவதற்கு இனி ஆதார் எண் தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு பன்னிரண்டு இலக்க ஆதார் எண் அல்லது 28 இலக்க பதிவு எண் தேவை என்ற நிலை இருந்தது. இனி செல்போன் நம்பர் மூலமாக மட்டுமே புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். UIDAI இணையதளத்தில் enrollment ID review ஆப்ஷன் மூலம் செல்போன் என்னை கொண்டு புதிய ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.