இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சர்க்கரை தடையை அடுத்த ஆண்டு வரை நீடித்துள்ளது.
நமது இந்தியா சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் நமது நாட்டில் சர்க்கரையின் தேவையை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு ஏற்றுமதிக்கான தடையை விதித்துள்ளது. கடந்த மே மாதம் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சுதான்ஷீ கூறியதாவது. வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விழா காலம் வரவுள்ளது. இதனால் நமது நாட்டில் தேவையை கவனத்தில் கொண்டு சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது என கூறினார்.
அதேபோல் கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை இந்த தடை அமுக்கு வந்தது. ஆனால் தற்போது 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை இந்த தடையை மத்திய அரசு நீடித்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குனரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரைக்கு பதிலாக சுவையை கூட்டக்கூடிய இனிப்பூட்டிகள் ஏற்றுமதிகளுக்கு இந்த தடை கிடையாது என தெரிவித்துள்ளது.