இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் கேஒய்சி கட்டாயமாகும். விவசாயிகள் கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. அதன்படி ஜூலை 31-ஆம் தேதிக்குள் pm-kisan திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும். இந்நிலையில் pm-kisan திட்டத்தில் பதிவு செய்வதில் அதிக முறைகேடுகளை தடுக்கும் முயற்சியில் இந்த திட்டத்தின் கீழ் பயன்களை பெற விவசாயிகள் தங்கள் ரேஷன் கார்டு எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற புதிய உத்தரவை தற்போது அரசு பிறப்பித்துள்ளது.
அதன்படி விவசாயிகள் pm-kisan திட்டத்தில் பதிவு செய்யும்போது ரேஷன் கார்டின் சாப்ட் காப்பியை பி எம் கிசான் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது அவசியம். அதனுடன் திட்டத்தின் இ கேஒய்சி செய்வதையும் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இவையெல்லாம் சரிபார்க்கப்பட்ட பிறகு தான் pm-kisan பலன்களை விவசாயிகள் பெற முடியும். எனவே pm-kisan திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு விவசாயிகள் அனைவரும் கட்டாயம் இதனை செய்து முடித்து இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.