கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு தொடங்குவது கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் ஓய்வூதியத்தை பெற புதிய வங்கி கணக்கு தொடங்க வங்கிகள் வலியுறுத்தக் கூடாது என்றும் 7வது ஊதிய குழு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் ஓய்வூதியம் பெற புதிய வங்கி கணக்கு தொடங்க வங்கிகள் வற்புறுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஓய்வூதியம் பெற கூட்டு வங்கிக்கணக்கு கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Categories