ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களை வாங்கியதாக எஸ்எம்எஸ் வருவது, பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்வதில் சிக்கல், வயதானவர்களுக்கு கைரேகை சரியாக வரவில்லை என அவர்களுக்கு பொருட்களை வழங்க மறுப்பது என பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அரசின் கவனத்திற்கு தொடர்ந்து சென்ற வண்ணம் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகளையும் பொருத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அது தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் அத்தியாவசிய பொருட்களை பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் பரிசீலிக்க வேண்டும். அவ்வாறு பொருட்கள் வாங்காத ரேஷன் அட்டை தாரரின் முகவரி சீரான இடைவெளியில் சரிபார்க்கப்பட வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களின் பெயர்களை உடனுக்குடன் ரேஷன் அட்டையில் இருந்து நீக்க வேண்டும். அவர்களது பெயரை உபயோகித்து பொருட்கள் வழங்கப்படும் அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தாத ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.