Categories
உலக செய்திகள்

இனி இது போடக்கூடாது… தடை உத்தரவு போட்ட அரசு… அதிர்ச்சியில் மக்கள்… நீதிமன்றத்தில் கோரிக்கை….!!

மேற்கு ஜெர்மனியில் பாடேன்-வுர்ட்டம்பெர்கில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவிகள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் முழுவதுமாக முகத்தை மூடி நடமாடுவதற்கு தடை விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்கு ஜெர்மனியில் இருக்கின்ற பாடென்-வுர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவிகள் அனைவரும்  புர்கா போன்ற முகத்தை மறைக்கக் கூடிய துணிகளை அணிவதற்கு தடை விதித்துள்ளனர்.

முகம் முழுவதையும் துணியை வைத்து மறைப்பது ஒரு சமூகம் சுதந்திரமாக குறிப்பிட முடியாது என கூறியுள்ளனர். இத்தகைய புதிய சட்டமானது ஜெர்மனியில் இருக்கின்ற இஸ்லாமிய மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் இத்தகைய விதிமுறையை தடைசெய்ய வேண்டுமென இஸ்லாமிய மக்கள் பெரும்பாலானோர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |