Categories
சினிமா

இனி இதெல்லாம் கிடையாது!…. நடிகர், நடிகைகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அண்மையில் தயாரிப்புச் செலவுகள் உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்துவது, நடிகர்களின் சம்பளம், திரையரங்க டிக்கெட் கட்டணம், விபிஎப் கட்டணம், ஓடிடி-யில் படங்களை வெளியிடுவது ஆகிய பிரச்சனைகள் பற்றி பேசி முடிவு செய்த பிறகு, படப்பிடிப்புகளைத் தொடர முடிவு செய்தது. இந்நிலையில் தெலுங்கு திரைப் பட தயாரிப்பாளர்கள் சங்கமானது சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவற்றில் இனி வரும் காலங்களில் நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நாள் சம்பளம் கிடையாது எனவும் நடிகர்களின் ஊதியத்தில் அவர்களுக்கான பணியாளர்கள், பயண செலவு, தங்குமிடம், சிறப்பு உணவுகள் போன்றவை அடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்சொன்னவைகளுக்காக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூடுதலாக செலவு செய்ய முடியாது. தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் இது பொருந்தும் என பல விஷயங்களை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |