பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ரயில் பயண விதிகளில் சில முக்கிய மாற்றங்களை இந்திய ரயில்வே கொண்டுவந்துள்ளது. அதன் படி:
ரயிலில் இரவு நேரத்தில் செல்போனில் சத்தமாக பாடல் கேட்பது கூடாது
*இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும்.
*சோதனை ஊழியர்கள் சத்தமின்றி பணியாற்ற வேண்டும்
*முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி உதவி வழங்கப்பட வேண்டும்
*பிறர் தூக்கத்தை கெடுக்கும் வகையில் சத்தமாக பேசக் கூடாது உள்ளிட்ட விதிகள் அமலுக்கு வந்துள்ளன.