சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளன. இது ஒருபுறமிருக்க, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் சீனாவை தீவிரமாக வேவு பார்க்கும் வேளையில் ஈடுபட்டு வருவதுடன் அந்நாடு குறித்த தகவல்களை பொதுவெளியில் வெளிப்படையாக கூறி சீனா மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், ஐந்து நாடுகளின் கண்கள் பிடுங்கப்படும் என்று அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய ஐந்து நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான ஹாங்காங்கில் உரிமை குரல் எழுப்பும் மக்களை அந்நாட்டு அரசு ஒடுக்குவதாக இந்நாடுகள் பொய் பிரச்சாரம் செய்வதாக சீனா தற்போது குற்றம்சாட்டியுள்ளது.