தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும்போது கீழே சிந்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக நியாய விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரி பார்க்க வேண்டும். தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்.
நியாய விலை கடைகளில் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வினியோகம் செய்யும் போதோ அல்லது மற்ற பொருட்களை விநியோகம் செய்யும் போது கீழே சிந்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது. இவற்றை நியாய விலை கடை ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.