கொச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வு பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன் பிறகு உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் விமானந்தாங்கி போர் கப்பலான விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனை தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் இந்தியா கப்பற்படைக்கு புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவின் கடல்சார் வலிமையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றக்கூடிய வகையில் அந்த கொடி இருக்கும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து காலணி ஆதிக்கத்தை குறிக்கும் விவரங்கள் எதுவும் புதிய கொடியில் இடம்பெறாது என்றும் இனி இந்திய கப்பற்படை வசம் உள்ள அனைத்து கப்பல்களில் இந்த புதிய கொடி இடம் பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.