அசாம் மாநிலத்துக்கு 3 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோர் நேற்று சென்றனர். இதையடுத்து அவர்கள் கவுகாத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநில அலுவலகத்தை திறந்துவைத்தனர். இந்நிலையில் அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்றுவிக்கும் மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருக்கிறது.
மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தியில் தான் பேச வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, பணியாளர் தேர்வின்போதே இந்தி தெரியுமா என்பதை சோதிக்க வேண்டும் என்றும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழி என இந்தியை அறிவிக்க வேண்டும் எனவும் அக்குழு வலியுறுத்தி இருக்கிறது.