Categories
Uncategorized தேசிய செய்திகள்

இனி இந்த ஆடை அணியக்கூடாது…. தண்டனை கடுமையாக இருக்கும்…. எச்சரிக்கை விடுத்த பஞ்சாயத்து …!!

உத்திரப்பிரதேசத்தில் மேற்கத்திய ஆடைகளை அணிந்தால் தண்டனை வழங்கப்படும் என்று பஞ்சாயத்து தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த சில கிராமங்களில் இந்த காலகட்டத்தில் கூட ஊர் பஞ்சாயத்து நடத்தப்படுகின்றன. அவ்வாறு நடத்தப்பட்ட ஊர் பஞ்சாயத்து சார்பில் வழங்கப்படும்  தீர்ப்புகளுக்கு அந்த கிராமம் முழுவதும் கட்டுப்படுகின்றனர். அவ்வகையில் சமீபத்தில் தேர்தல் தொடர்பான பஞ்சாயத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் ட்ரவுசர், டி-ஷர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு சில ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இதனை கண்ட பஞ்சாயத்து தலைவர்கள் இது மேற்கத்திய ஆடைகள் நமது நாட்டு கலாச்சார ஆடைகளை சார்ந்தது அல்ல என்று கடுமையாக கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆண்கள் பேண்ட், குர்தா, தோத்தி போன்ற ஆடைகளையும், பெண்கள் சேலை, சுடிதார், காக்ரா பேண்ட் போன்ற ஆடைகளையும் தான் அணிய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். மேலும் இந்த தீர்ப்பை மீறி இனி யாராவது மேற்கத்திய ஆடைகள் அணிந்தால் அவர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |