ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் அனைத்து திட்டங்களையும் நீக்கியதாக அறிவித்தது. தனது போர்டு போலியோவில் இருந்து 1499 ரூபாய் மற்றும் 4199 ரூபாய் ஆகிய இரண்ட ரீசார்ஜ் திட்டங்களையும் நீக்கி உள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும் பயணங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை பெற்று வந்தனர்.
இதில் 1499 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் பயணங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம் பெற்ற குரல் அழைப்புகள் ஆகியவற்றின் பலன்கள் கிடைத்தது. அதேசமயம் பயணங்கள் ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை பெறுகிறார்கள் என்பதையும், அதன் செல்லுபடி ஆகும் காலம் 84 நாட்கள் என்பதையும் குறிப்பிடலாம்.
அடுத்ததாக 4,199 ரூபாய் திட்டத்தில் பயன் அவர்கள் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம் பெற்ற குரல் அழைப்புகளை ஒரு வருடத்திற்கு பெறுகிறார்கள். அதே சமயம் ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரிமியம் சந்தா இலவசமாக கிடைக்கின்றது.
ஆனால் தற்போது இந்த திட்டங்கள் எதுவும் தொலைதொடர்பு நிறுவனத்தின் இணையதளத்தில் அல்லது மொபைல் செயலியில் தெரியவில்லை. ஜியோ உடன் கூட்டு சேர்ந்ததால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்தியாவில் நிறைய பயன் அடைந்துள்ளது. தற்போது ஜியோ எந்த ஓடிடி பலன்களையும், தொகுக்கப்பட்ட ப்ரீபெய்டு திட்டங்களை வழங்கவில்லை.இருந்தாலும் இந்த தொலைதொடர்பு நிறுவனம் எதிர்காலத்தில் புதிய ஓடிஐ திட்டங்களை கொண்டு வரும் என கூறப்படுகிறது.