Categories
உலக செய்திகள்

இனி இந்த குழந்தைகளுக்கும் கிடைக்கும்..! சோஷியலிஸ்ட் கட்சியின் முயற்சியால்… நீக்கப்பட்ட தடை..!!

ஆவணங்களற்ற குழந்தைகள் ஜெனீவாவில் நிதியுதவி பெறுவதற்கு தடையாக இருந்த சிக்கல்கள் தற்போது நீங்கியுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு குறைந்த வருமானம் கொண்டு வாழ்க்கையை நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 130 முதல் 180 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மாதம் ஒன்றுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குழந்தைகள் நிதி உதவியை பெற வேண்டுமானால் வாழிட உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு விதி இருந்தது. இதனால் பல குழந்தைகள் நிதியுதவி பெறுவதற்கு வாய்ப்புகள் இருந்தும் அந்த நிதியை வாழிட உரிமம் இல்லாததால் பெற இயலாத நிலையில் இருந்தது. இந்நிலையில் சோஷியலிஸ்ட் கட்சி வாழிட உரிமம் இருந்தால் தான் குழந்தைகளுக்கு நிதியுதவி என்ற கட்டுப்பாடு, சமூகத்தில் சிலரை ஒதுக்கி வைப்பதற்கு வழிவகுக்கும் என்று கூறி அதை நீக்க வேண்டும் என்று மசோதா ஒன்றை கொண்டு வந்தது.

அதை அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து வாழிட உரிமம் இல்லாதவர்களுக்கு தடை நீக்கப்பட்டதால் நிதியுதவியை பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் 15 பேர் எதிர்ப்பும், 57 பேர் ஆதரவும் அளித்துள்ளனர். இதையடுத்து அந்த மசோதா வெற்றி பெற்றது. மேலும் 20000 சுவிஸ் ஃப்ராங்குகள் அரசுக்கு செலவு பிடிக்கும் என்றாலும், அதனால் சுமார் 600 குடும்பங்கள் பயன் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |