பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலில் வருகை பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நாளை முதல் TNSED என்ற செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்,பு முன் அனுமதி உள்ளிடவற்றையும் ஆசிரியர்கள் இனி இந்த செயலி வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிட்டவும் அதை கண்காணிக்கவும், ஆசிரியர்கள், பள்ளி தலைவர்கள் மற்றும் பிற நிர்வாக பணியாளர்களால் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.