Categories
தேசிய செய்திகள்

இனி இந்த டிரெஸ் போட்டா தான்… கோவிலுக்குள்ள விடுவாங்களாம்… மாநில அரசு அறிவித்த ஆடை கட்டுப்பாடு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோயில்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், கோவில்கள் போன்ற பகுதிகளில் ஆடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கமாகி உள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் கோவில்களில் ஆடைகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்மிக் பிரிஷந்த் எனப்படும் இந்து மத கோவில்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அமைப்புக்கு கீழ் இருக்கும் 211 கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி கோவிலுக்கு வரும் பெண்கள் அனைவரும் சேலை அணிந்து வரவேண்டும். சேலை மார்பகப் பகுதி முழுவதையும் மறைத்து இருக்க வேண்டும். அதே போல ஆண்களுக்கும் சில ஆடை கட்டுப்பாடுகளை கொண்டுவர அரசு திட்டமிட்டு வருகின்றது. இதனை அம்மாநிலத்தைச் சேர்ந்த பலரும் வரவேற்றுள்ளனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |