Categories
உலக செய்திகள்

இனி இந்த தடுப்பூசியை போடலாம்…. எந்த பாதிப்பும் இல்லை…. தகவலை வெளியிட்ட சுயதீன பாதுகாப்பு குழு…!!

ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசிகள் குறித்த ஆய்வின் முடிவினை  அமெரிக்காவின் சுயதீன பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகளை போட்டு சிலருக்கு ரத்தம் உறைதல், பெருமூளையில் ரத்தக் கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அதனை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் குறித்து உலக சுகாதார நிறுவனமும், ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் மேற்கொண்ட ஆய்வில் இந்த தடுப்பு மருந்துகளில் அதிக அளவில் நன்மைகள் இருக்கின்றன, இதற்கும் ரத்தம் உறைதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதனால் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தற்போது அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதனிடையே அமெரிக்கா, பெரு, சிலி போன்ற நாடுகள் சுமார் 32,000 தன்னார்வலர்களை வைத்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் சுயதீன பாதுகாப்பு குழு ரத்தம் உறைதல் மற்றும் பெரும் மூளையில் ரத்தம் கசிவு போன்றவை குறித்து மேற்கொண்ட ஆய்வில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 21,583 பேருக்கு இந்த பிரச்சனை குறித்து எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் முடிவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் 79% பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |