பிரிட்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள 7 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்குவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் ,7 நாடுகளான இஸ்ரேல் ,ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அத்தியாவசிய காரணத்திற்காக மட்டும் பயணிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. மேலும் பிரான்ஸ் அமைச்சகம் பிரான்சுக்கு வரும் அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்கு குறைவான காலப்பகுதியில் வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் தங்களுக்கு இல்லை என்ற சோதனை முடிவுகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பிரிட்டனிலுள்ள உருமாறிய கொரோனா தொற்றால் அத்தியாவசியமற்ற அனைத்து பயணிகளையும் ஜனவரி 31 அன்று பிரான்ஸ் அரசாங்கம் பயணம் மேற்கொள்ள தடை செய்தது. மேலும் பிரான்ஸ் சுற்றுலாத்துறை அமைச்சரான இயென் பாப்டிஸ்ட்டே ஏழு நாடுகளில் சுகாதார நிலைமை மேம்படுத்துவதால் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.