Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இனி இந்த தொல்லை இல்லை…. திடீரென அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!

மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 25 வருடங்களாக இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் கும்பகோணம், பூம்புகார், சிதம்பரம், சென்னை, மணல்மேடு போன்ற மார்க்கங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த காமராஜர் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று வரவும், பேருந்துகள் எளிதாக பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகர சபை கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பி பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஆணையர் செல்வ பாலாஜி உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தப்படும் என நேற்று முன்தினம் நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து நேற்று காலை முதல் நகர அமைப்பு அலுவல ராஜேந்திரன், வருவாய் அலுவலர் செல்வி மேற்பார்வையில் ஊராட்சி ஊழியர்கள் போலீஸ் முன்னிலையில் பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதற்கு பேருந்து டிரைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |