Categories
உலக செய்திகள்

இனி இந்த நாட்டை விட்டு வெளியேற முடியாது…. மீறினால் ரூ. 5,00,391 அபராதம்…. அதிரடி சட்டத்தை கொண்டு வந்த போரிஸ்….!!

பிரிட்டன் அரசு வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளின்படி புதிய மசோதாவை அமல்படுத்த இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலின் மூன்றாவது அலைகள் தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் பிரிட்டனிலும் இந்த அலைகள் பரவலாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போரிஸ் ஜான்சன் இதனை தடுப்பதற்காக வரும் மார்ச் 29ம் தேதி  முதல் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரிட்டனிலிருந்து தேவையான காரணம் இன்றி மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதித்த பிரிட்டன் அரசு கல்வி, மருத்துவம், திருமணம், இறுதி சடங்கு, வேலை போன்ற காரணத்திற்காக நாட்டை விட்டு வெளியே செல்லலாம், ஆனால் விடுமுறை நாட்களை கழிப்பதற்கோ, ஓய்வு எடுப்பதற்காகவோ மக்கள் வெளியே போக கூடாது, இதனை மீறுபவர்களுக்கு ரூ. 5,00,391 அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

இதனிடையே பிரிட்டனை விட்டு வெளியே செல்பவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையென்றால்  ரூ. 20,015 அபராதம் விதிக்கப்படும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து இந்த புதிய சட்ட மசோதாவானது சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் 2021ன் படி வரும் மார்ச் 29 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் முடிந்தவரை வீட்டிலிருந்தே வேலை செய்யவும், 6 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவும் வேண்டும் என்று அந்நாட்டு அரசு மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது.

Categories

Tech |