Categories
தேசிய செய்திகள்

இனி இந்த பொருட்களை வாங்க….. “சூப்பர் மார்க்கெட் போக வேண்டாம்”….. ஸ்விக்கியின் அசத்தல் அப்டேட்…..!!!!

ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான swiggy தொற்று காலங்களில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும், ஆன்லைன் மூலமாக வழங்கி வந்தது. குறிப்பாக மளிகை சாமான்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் இவற்றை விரைந்து டெலிவரி செய்யும் பணியில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஈடுபட்டது. ஸ்விக்கி நிறுவனமும் இன்ஸ்டாமார்ட் என்ற பெயரில் 45 நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை இந்தியாவில் தொடங்கியது. இந்த சேவை தற்போது வரை ஒரு செய்து வருகிறது .

இந்நிலையில் மளிகை பொருட்களை வீட்டில் டெலிவரி செய்யும் இன்ஸ்டாமார்ட் சேவை தற்போது நள்ளிரவு 3 மணி வரை நைட் இருப்பதாக swiggy நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது காலை 7:00 மணி முதல் இரவு 1 மணி வரை இந்த சேவை செயல்பட்டு வருகின்றது. இனி அதனை நீட்டித்து இரவு 3 மணி வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஸ்விகி சென்னை, பெங்களூரு, மாதிரியான மெட்ரோ நகரங்களில் இந்த சேவை முதற்கட்டமாக தொடங்க உள்ளது. எனவே இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதாவது தேவை இருந்தால் அதனை இதன் மூலமாக ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

Categories

Tech |