ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசு முன்னதாக 2022ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.