கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்து விடுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.