Categories
மாநில செய்திகள்

இனி இந்த வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 6, 7.20, 6.45 மணிக்கு என மூன்று நேரங்களில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வரை கூடுதலாக காலை 10 மணி மற்றும் மாலை 4.05 மணிக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் ஜூலை 1 முதல் இயக்கப்பட்டது.அதனைப் போலவே திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரை கூடுதலாக காலை 10.15 மணிக்கு, மாலை 4.25 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

மேலும் நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி மற்றும் மாலை 6:15 மணி என இரண்டு சிறப்பு ரயில்களும், நெல்லை முதல் பாலக்கோடு வரை எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றது. ஜூலை 1 முதல் நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு காலை 9.10 மணிக்கு, மதியம் 1.50 மணிக்கு கூடுதலாக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதனைப் போலவே மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து எல்லைக்கு கூடுதலாக இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டது. ஜூலை 1 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |