ஆதார் என்பது அனைத்து விஷயங்களுக்கும் மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஆதார் திருத்தங்களை வீட்டில் இருந்துகொண்டே செய்யும்படி பல சேவைகளை UIDAI வழங்கியுள்ளது. இந்நிலையில் UIDAI இரண்டு தனித்துவமான ஆதார் சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஆதார் அட்டையில் முகவரி புதுப்பிக்கும் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் பிற ஆதார் வைத்திருப்பவர்கள் இந்த வசதி மூலம் முகவரியை திருத்தம் செய்து வந்தனர்.
ஆனால் தற்போது இந்த வசதி முடக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக முகவரி சான்றிதழ் பட்டியலின்படி (https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf) பட்டியலில் இருந்து எந்த ஒரு முகவரி மூலமாகவும் உங்கள் முகவரியை புதுப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அடுத்தபடியாக பழைய வடிவத்தில் ஆதார் அட்டையை பிரிண்ட் செய்யும் வசதியை நிறுத்தியுள்ளது. தற்போது முன்பு போல நீண்ட அகலமான ஆதார் அட்டைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் டிவிசி அட்டைகள் வெளியிடப்படுகிறது. இந்த அட்டை டெபிட் கார்டு அல்லது பாக்கெட்டில் வைத்து எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதன் காரணமாகப் பழைய ஆதார் அட்டை சேவையை நிறுத்தியுள்ளது.