வளர்ப்புநாய் கடிக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக, பிட்புல் உள்ளிட்ட 3 இனத்தை சேர்ந்த நாய்களை செல்லப் பிராணியாக வளர்க்க காசியாபாத் மாநகராட்சி தடைவிதித்திருக்கிறது. இந்த மாத துவக்கத்தில் உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் லிப்டில் சென்ற நபரையும், குடியிருப்பு வளாகத்தில் சிறுவனையும் வளர்ப்புநாய் கடித்து குதறிய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது பிட்புல் வகை நாய் கடித்தத்தில் சிறுவனின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டது. இந்நிலையில் வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகளை காசியாபாத் மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது.
அந்த வகையில் பிட்புல், ரோட்வெய்லர், டோகோ அர்ஜென்டினோ வகை நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் ஒரு வீட்டில் ஒரு நாய் மட்டுமே செல்லபிராணியாக வளர்க்கவேண்டும். அத்துடன் நாய் வளர்ப்பதற்குரிய லைசென்சை மாநகராட்சியிலிருந்து பெற்றிருக்க வேண்டும். வெளியே அழைத்துவரும் நாய்களுக்கு அதன் வாய்ப் பகுதியில் கண்டிப்பாக வாய்மூடி அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை காசியாபாத் மாநகராட்சி விதித்துள்ளது.