Categories
தேசிய செய்திகள்

இனி இந்த 5 வங்கிகளின்…. Passbook, Cheque செல்லாது – அதிரடி அறிவிப்பு…!!!

நிதி நிலைமை மோசம் மற்றும் கடனில் சிக்கி தவிக்கும் பல தனியார் வங்கிகளை அரசு வங்கிகளுடன் இணைக்கும் பணியை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அதன்படி சில வங்கிகளுடைய இணைப்பும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் விஜயா மற்றும் தேனா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி வங்கியானது இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயா வங்கி, தேனா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்களின் காசோலை மற்றும் பாஸ்புக் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கூறிய வங்கிகள் பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல், இந்தியன் வங்கி ஆகியவற்றுடன் இணைக்கப்படுவதால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எண், IFSC, MICR குறியீடு மாற்றம் செய்யப்படும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |