கூகுள் தேடல் கூகிள் நிறுவனத்தின் உலகின் மிகப் பெரும் தேடற்பொறியாகும். கூகிள் தேடுபொறி இணையத்தில் உள்ள அனைத்து பக்கங்களில் பயனர்களின் தேடலுக்கு ஒத்த உள்ளடக்கத்தை உள்ளவையாக கருதப்படும் பக்கங்களை பட்டியலிடுகின்றது. கூகிள் தேடுபொறி பல்வேறு சேவைகள் மூலமாக பல நூறு மில்லியன் தேடல்களை மேற்கொள்கின்றது.
இந்நிலையில் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர்பிரட்( 2.3.7) மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷனில் இயங்கும் ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் செப்டம்பர் 27ஆம் தேதிக்கு பிறகு கூகுளின் எந்த செயலியும் இயங்காது என்று கூகுள் அறிவித்துள்ளது. அதன்படி அந்த டிவைஸ்களில் ஜிமெயில், கூகுள் மேப், யூடியூப் உள்ளிட்ட கூகுள் செயலிகளை பயன்படுத்த முடியாது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க பயனர்கள் ஆண்ட்ராய்டு 3.0, 4.0 க்கு அப்டேட் செய்ய வேண்டும்.