2024 வரை புதிய பொறியியல் கல்லூரிகளை திறக்க கூடாது என்று நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. அதாவது கல்லூரி வளத்தை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.
அதனால்தான் புதிய பொறியியல் கல்லூரிகளில் முதலீடு செய்வது சரியல்ல. அதிகமான இடங்கள் காலியாக இருந்தால் நிர்வாக வளம் குறையும், தரமான ஆசிரியர்கள் நியமனம் பாதிக்கும், கல்வியின் தரம் பாதிக்கும். இவற்றை கருத்தில் கொண்டு புதிய பொறியல் கல்லூரியில் வேண்டாம் என்று நிபுணர் குழு கூறுகிறது.