Categories
மாநில செய்திகள்

இனி இப்படிதான்…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகுப்பை பொங்கல் தினத்துக்குள் வழங்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டது. இதற்கிடையில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சனை, பரிசுப்பொருட்கள் ரேஷன் கடைகளில் வருவதற்கு தாமதம் ஆகிய பல்வேறு காரணங்களால் கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

மேலும் பல்வேறு ரேஷன் கடைகளில் சரியான வேலை நேரம் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் செயல்படுவதற்கான வேலை நேரம் தொடர்பாக சரியாக தெரிவதில்லை. இதனால் தற்போது ரேஷன் கடைகள் செயல்படுவதற்கான புதிய நேரத்தை அரசு அறிவித்துள்ளது. இதனை அனைத்து ரேஷன் கடைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் இந்த வேலை நேரம் தொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும்படி ரேஷன் கடைகளில் தகவல் பலகை ஒன்றில் எழுத வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் காலை 8.30- மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 -இரவு 7 மணி வரையிலும் செயல்படும் என்று கூறப்படுள்ளது. அதன்பின் மற்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ரேஷன் அட்டைதாரர்கள் இந்த நேரத்தில் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |