வருமான வரி கட்டுபவர்கள் ஆன்லைன் மூலமாகவே இனி வரியை செலுத்தலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வருமான வரி துறையின் இ ஃபைலிங் போர்டல் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி ஆர்டிஜிஎஸ் அல்லது என்இஎஃப்டி மற்றும் பேமெண்ட் கேட்வே முறைகள் உட்பட மின், பண வரி சேவைக்கான கட்டணங்களை செலுத்துவதற்கான முறையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த சேவையை வழங்கும் வங்கியில் ஆர்டிஜிஎஸ் அல்லது என்இஎஃப்டி-ஐ பயன்படுத்தி வரி செலுத்தலாம். அதோடு தற்போது நடைமுறையில் உள்ள என்எஸ்டிஎல்-ஐ பயன்படுத்தியும் வரி செலுத்தலாம்.
அதன் பிறகு வரி செலுத்துபவர்கள் சிஆர்என் தேதி உருவாக்கப்பட்டதிலிருந்து 15 நாட்களுக்குள் வரியை செலுத்த வேண்டும். ஒருவேளை முன்கூட்டியே வரி ஏற்படுத்தப்பட்டால் சிஆர்என் உருவாக்கப்பட்ட தேதியில் இருந்து 15 நாட்கள் அல்லது நடப்பாண்டில் மார்ச் 31-ஆம் தேதிக்குள் எது முன்பு வருகிறதோ அதில் செலுத்த வேண்டும். மேலும் வருமான வரியை இனி நெட் பேங்கிங், யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற முறைகளை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே செலுத்திக் கொள்ளலாம்.