Categories
மாநில செய்திகள்

இனி இப்படியே பணம் செலுத்தலாம்…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  இதற்கு இடையில் அரசு ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யவுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரேஷன் கடைகளில் 5 கிலோ, 2 கிலோ கேஸ் சிலிண்டர்கள் விற்கப்படும்; ரேஷன் ஷன் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை எவர்சில்வர் கொள்கலனில் வைத்து விநியோகம் செய்யப்படும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 கடைகளை மாதிரி நியாயவிலை கடைகளாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |