Categories
மாநில செய்திகள்

“இனி இப்படி செய்யக்கூடாது” ஹோட்டல்களில் நடத்தப்படும் திடீர் சோதனை….. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும் பொழுது ஊடகங்களையும் கூடவே அழைத்து சென்று வீடியோ எடுத்து வெளியிடுவதாகவும், இதனால் உணவகங்களின் பெயர் கெட்டுபோவதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதி, கெட்டுப்போன உணவு என்பதை ஆய்வகத்தில் உறுதி செய்த பிறகு நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு அதிகாரம் இருப்பதாகவும், ஆனால் அப்படி இல்லாமல் முன்கூட்டியே ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுத்து வெளியிடுவது தவறு என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இனி சோதனைக்கு செல்லும் போது ஊடகங்களை அழைத்துச் செல்லக்கூடாது. அதற்கு மாற்றாக துறை ரீதியான புகைப்பட கலைஞர்களையோ, வீடியோ பதிவாளரையோ அழைத்துச் செல்லலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஹோட்டல்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை வீடியோ எடுத்து வெளியிட தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியும், தமிழக அரசும் அக்டோபர் 17ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Categories

Tech |