தலைநகர் டெல்லியில் இருப்பவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற இனி புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வேலை நேரம் முடிந்த பிறகு இரவு நேரங்களில் ஓட்டுநர் தேர்வை டெல்லி அரசு நடத்த முடிவு செய்துள்ளது. மயூர் விஹார், ஷகுர்பஸ்தி மற்றும் விஸ்வாஸ் நகர் ஆகிய இடங்களில் மூன்று சோதனை தயார் செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தானியங்கி பாதையில் சோதனை நடைபெறும். ஒவ்வொரு பாதையிலும் ஒரு நாளைக்கு 45 பேர் வரை சோதனை செய்ய இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு மூன்று தடங்களில் 135 பேர் பங்கேற்கலாம்.
ஏப்ரல் 30ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது மூன்று இடங்களில் 2565 தடங்கள் முன்பதிவு செய்யப்பட்டது. இதேபோன்று 12 தானியங்கி ஓட்டுனர் சோதனை தடங்களை நிறுவுமாறு மாருதி சுசுகி அறக்கட்டளையிடம் போக்குவரத்து துறை கேட்டுக்கொண்டுள்ளது. இவற்றை ரோஸ்மெர்டா டெக்னாலஜி லிமிடெட் பார்வையிட்டது. 12 தடங்கள் நிறுவப்பட்டதன் மூலம் ஒரு நாளைக்கு சோதனையின் எண்ணிக்கை 3000 மாக உயரும். 17 உயர் திறன்கொண்ட கேமராக்களை பயன்படுத்தி ஓட்டுநர் சோதனைகள் உன்னிப்பாக கவனிக்கப்படும். வெளிப்படைத்தன்மை பராமரிக்க ஆறு சேவையகங்கள் நிறுவப்பட்டுள்ளது. முடிவு தானாகவே மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.