தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பைக்கில் இரண்டு பேர் செல்ல தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மக்கள் மருத்துவ தேவை என்றால் மட்டுமே பைக்கில் பின்னால் ஒருவரை அழைத்து வரலாம். அதுவும் பொய்க் காரணம் கூறி கொண்டுவரக் கூடாது. மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.