ஓபிஎஸ் இனி துணிந்து செயல்பட உள்ளார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. ஜூலை 11-ஆம் தேதி பொதுகுழு நடைபெறுவது என்பது கனவு மட்டுமே. அது நனவாகாது. தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். அதிமுக-வில் குழப்பம் விளைவிக்க எடப்பாடிபழனிசாமி தரப்பு முயற்சி செய்வதுடன் அதிமுகவை கம்பெனி போல் நடத்தி அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் கட்சியை ஓபிஎஸ் தலைமையில் நாங்கள் வழி நடத்துவோம்” என்று அவர் கூறியுள்ளார்.
Categories