அதிபருக்கான அதிகாரங்களை குறைப்பதற்கான மசோதாவை உருவாக்கியுள்ளனர்.
இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு அதிபராக சிறிசேனா இருந்தார். அப்போது அரசியல் சட்டத்தில் 19ஏ என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த திருத்தத்தினால் அதிபரை விட நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அதிபராக வந்த கோத்தபய ராஜபக்சே வந்தார். அப்போது அவர் இந்த திருத்தத்தை மாற்றி 20 ஏ என்ற திருத்தத்தை கொண்டு வந்தார். அதில் அதிபருக்கே கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார பிரச்சினைகளுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர்கள் தான் காரணம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிபரின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை ஏற்று அரசியல் சட்டத்தில் 22-வது திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவை இலங்கை அரசு உருவாக்கியது. அதில் அதிபரின் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டது. இந்த மசோதா அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டிற்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் முடிவு இலங்கை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சபாநாயகர் மகிந்த யாபா கூறியதாவது. அதிபரின் அதிகாரங்களை குறைப்பதற்கான மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் எனவும், மசோதாவில் உள்ள சில உட்பிரிவுகள், அரசியல் சட்டத்திற்கு முரணாக இருப்பதால் அவை மீது நாடு தழுவிய வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் பெற வேண்டும் என கூறினார்.
இதுகுறித்து நிதித்துறை மந்திரி கூறியதாவது. கோத்தபய ராஜபக்சே அதிபராக இருந்தபோது பிரதமரையும், மந்திரி சபையையும் நீக்குவதற்கு அதிபருக்கு உள்ள அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவே அவர் விரும்பினார் . ஆனால் அவர் பதவி விலகியவுடன் மசோதாவை திருத்தி விட்டோம். இனிவரும் காலங்களில் அதிபருக்கு அதிகாரம் கிடையாது. மேலும் ஒருவரிடமே அதிகாரம் குவிந்திருப்பதை இந்த மசோதா தடுக்கிறது என அவர் கூறியுள்ளார்.