உலக அளவில் இந்தியா, கனடா, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இளைஞர்கள் அதிக அளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றார்கள். சர்வதேச அளவில் 13 வயதுகுட்பட்ட 40 மில்லியன் சிறுவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் புகைபிடிக்ககூடாது என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அரசும் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து இளைஞர்களை காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த புதிய மசோதாவின் படி இளைஞர்கள் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளதோடு, 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்கு மேல் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சிகரெட் பிடிப்பதற்கு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 2025-ஆம் ஆண்டுக்குள் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத நாடாக நியூசிலாந்தை மாற்றும் நோக்கத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.