Categories
மாநில செய்திகள்

இனி இளைஞர்கள் ஸ்போர்ட்ஸில் ஜொலிக்கலாம்…. முதல்வர் சரவெடி அறிவிப்பு…!!!!!

2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கலான பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இரண்டாம் கட்டமாக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்றைய கூட்டத்தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் விளையாட்டு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் வடசென்னையில் ரூபாய் 10 கோடி மதிப்பில் குத்துச்சண்டை வளாகம் அமைக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என்றும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூபாய் 3 கோடியில் விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு என்று தனியாக பிரமாண்டமான மைதானம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |